மெக்ஸிக்கோவின் அன்ட்ரியா மேஸா பிரபஞ்ச அழகியானார்

மெக்ஸிக்கோவின் அன்ட்ரியா மேஸா பிரபஞ்ச அழகியானார்

மெக்ஸிக்கோவின் அன்ட்ரியா மேஸா பிரபஞ்ச அழகியானார்

எழுத்தாளர் Staff Writer

18 May, 2021 | 11:47 am

Colombo (News 1st) மெக்ஸிக்கோ அழகி அன்ட்ரியா மேஸா (Andrea Meza), இம்முறை பிரபஞ்ச அழகியாக மகுடம் சூடினார்.

இம்முறை பிரபஞ்ச அழகிப் போட்டி 69 ஆவது தடவையாக நடைபெற்றது.

உலகின் பல நாடுகளைச் சேர்ந்த 73 அழகிகள் இந்தப் போட்டியில் பங்கேற்றிருந்தனர்.

மெக்ஸிக்கோவின் 26 வயதான அன்ட்ரியா மேஸா, பிரபஞ்ச அழகியாக மகுடம் சூடினார்.

பிரேஸிலின் ஜூலியா காமா இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.

69 ஆவது பிரபஞ்ச அழகிப் போட்டியின் இறுதிப் போட்டி கடந்த வருடம் நடைபெறவிருந்தாலும் கொரோனா தொற்று நிலைமை காரணமாக அது இந்த வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.

அமெரிக்காவின் ஃப்லோரிடா மாநிலத்தில் பிரஞ்ச அழகிப் போட்டி நடைபெற்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்