கொஸ்கொட தாரக, ஊரு ஜூவா மரணம்: விசாரணை அறிக்கையை கோரியது இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு

கொஸ்கொட தாரக, ஊரு ஜூவா மரணம்: விசாரணை அறிக்கையை கோரியது இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு

கொஸ்கொட தாரக, ஊரு ஜூவா மரணம்: விசாரணை அறிக்கையை கோரியது இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு

எழுத்தாளர் Staff Writer

18 May, 2021 | 4:07 pm

Colombo (News 1st) கொஸ்கொட தாரக எனப்படும் தர்மதாச தாரக்க பெரேரா மற்றும் ஊரு ஜூவா எனப்படும் நாவுலகே தினித் மெலான் ஆகியோர் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தமை தொடர்பான விசாரணையின் முழுமையான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

பொலிஸ் பாதுகாப்பில் உள்ள சந்தேகநபர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது பொலிஸ் திணைக்களத்தின் பொறுப்பு என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் திணைக்களத்தின் உத்தரவுகள் மற்றும் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புகளிலும் இந்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அவ்வாறெனில், கடந்த சில நாட்களில் நிகழ்ந்துள்ள மரணங்கள் சட்டவாட்சி தொடர்பில் நாட்டினுள் பாரிய சிக்கலை தோற்றுவித்துள்ளதாக ஆணைக்குழு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

தமக்கு கிடைத்துள்ள முறைப்பாடுகள் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுப்பதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கையாகவே, ஆணைக்குழு பொலிஸ்மா அதிபரிடம் முழு விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்