அரச இணையத்தளங்கள் சிலவற்றின் மீது சைபர் தாக்குதல் 

அரச இணையத்தளங்கள் சிலவற்றின் மீது சைபர் தாக்குதல் 

அரச இணையத்தளங்கள் சிலவற்றின் மீது சைபர் தாக்குதல் 

எழுத்தாளர் Staff Writer

18 May, 2021 | 9:47 am

Colombo (News 1st) அரசாங்கத்தின் 04 இணையத்தளங்கள் ஊடுருவப்பட்டுள்ளன.

4 இணையத்தளங்களின் தரவுகளும் சிலரால் மாற்றப்பட்டுள்ளதாக இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவின் தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் ரவிந்து மீகஸ்முல்ல தெரிவித்தார்.

சுகாதார அமைச்சு, மின்சக்தி அமைச்சு, சீனாவிலுள்ள இலங்கை தூதரகம் மற்றும் ரஜரட்டை பல்கலைக்கழகம் ஆகியவற்றின் இணையத்தளங்களே இன்று (18) அதிகாலை ஊடுருவப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இவற்றில் சுகாதார அமைச்சு மற்றும் மின்சக்தி அமைச்சு ஆகியவற்றின் இணையத்தளங்கள் வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவின் தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் ரவிந்து மீகஸ்முல்ல குறிப்பிட்டார்.

இதுவரை தரவுகள் திருடப்படவில்லை எனவும் எனினும் தரவுகள் ஊடுருவப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்