வெலே சுதாவை சிறைக்கு வௌியில் அழைத்துச்செல்ல தடை

வெலே சுதாவை சிறைச்சாலைக்கு வௌியில் அழைத்துச்செல்ல தடை

by Staff Writer 17-05-2021 | 2:22 PM
Colombo (News 1st) பிரபல போதைப்பொருள் கடத்தற்காரரான 'வெலே சுதா' எனப்படும் சமந்த குமாரவை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை பூசா சிறைச்சாலைக்கு வௌியில் அழைத்துச் செல்வதற்கு தடை விதித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் (17) உத்தரவு பிறப்பித்துள்ளது.