முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்விற்கு அனுமதி

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்விற்கு அனுமதி

எழுத்தாளர் Staff Writer

17 May, 2021 | 8:08 pm

Colombo (News 1st) முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை நடத்த முல்லைத்தீவு நீதிமன்றம் நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது.

நாளை (18) நடைபெறவுள்ள முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை தடை செய்யக்கோரி முல்லைத்தீவு பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று (17) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது விடயங்களை ஆராய்ந்த முல்லைத்தீவு நீதவான் ரி. சரவணராஜா, பயங்கரவாதத்தை தூண்டாத வகையிலும் கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றியும் அஞ்சலி நிகழ்வை நடத்தலாமென உத்தரவிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்