புதிதாக பல கிராம சேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டன

புதிதாக பல கிராம சேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டன

புதிதாக பல கிராம சேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டன

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

17 May, 2021 | 2:05 pm

Colombo (News 1st) நாட்டின் 10 மாவட்டங்களின் பல கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் இன்று (17) முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

அதற்கமைய, மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட
150C கிராம உத்தியோகத்தர் பிரிவின்
நெசவு நிலைய வீதி
வேலாப்பொடி வீதி
கண்ணகி அம்மன் ஆலய வீதி மற்றும்
150B கிராம சேவகர் பிரிவின்
வாவிக்கரை வீதி,
அப்புகாமி வீதி ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட
கிண்ணியா,
பெரிய கிண்ணியா,
குட்டிகரச்சி,
அஹுதர் நகர்,
பெரியாற்றுமுனை,
மாலிந்துறை,
ரஹுமானியா நகர்,
சின்ன கிண்ணியா,
மாஞ்சோலை,
கட்டையாறு,
குறிஞ்சாக்கேணி,
முனைச்சேனை ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

குருநாகல் மாவட்டத்தின் கிரியுல்ல பொலிஸ் பிரிவுற்குட்பட்ட
ஹமன்கல்ல,
நாரங்கொட,
பட்டபொதெல்ல,
மல்கமுவ,
தொடம்பொத்த,
நாராங்கமுவ,
வத்கேதர,
கட்டுகம்பொல,
கவுடுமுன்ன,
ஹமனாகொடை,
வேத்வே,
மும்மானா,
மாஹரகம,
கீழ் மெத்தேபொல,
மேல் மெத்தேபொல,
கோந்துருவாவல,
மாஹின்கமுவ,
சியம்பலாவலானை,
போபிட்டிய,
மேல் லப்(B)பல,
கீழ் லப்(B)பல,
மத்கேம,
வெல்லேவ ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டன.

கம்பஹா மாவட்டத்தின் பியகம பொலிஸ் பிரிவின் கீழுள்ள பியகம வடக்கு கிராம சேவகர் பிரிவு முடக்கப்பட்டது.

இரத்தினபுரி மாவட்டத்தின் கஹவத்த பொலிஸ் பிரிவின்
நுகவெல மேற்கு,
உடஹவுபே நுகவெல கிழக்கு,
எந்தான,
மடலகம ஜனபதய மற்றும்
இறக்குவானை பொலிஸ் பிரிவின்
பனாப்பிட்டிய தெற்கு,
பனாப்பிட்டிய வடக்கு,
கப்பெல,
மியனவிட்ட மேற்கு ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டன.

காலி மாவட்டத்தின் எல்பிட்டிய பொலிஸ் பிரிவின் பட்டுவன்ஹேன மற்றும் வல்அம்பகல கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் முடக்கப்பட்டன.

அம்பாறை மாவட்டத்தின் பதியத்தலாவ பொலிஸ் பிரிவின் கெஹெல்உல்ல கிராம சேவகர் பிரிவின் கடுபகஹர கிராமம் முடக்கப்பட்டது.

களுத்துறை மாவட்டத்தின் இங்கிரிய பொலிஸ் பிரிவின்
ரய்கமவத்தை கீழ்பிரிவு,
ரய்கம்புர,
ரய்கம் ஜனபதய மற்றும் அகலவத்தை பொலிஸ் பிரிவின் வெதிகந்த கிராமம் முடக்கப்பட்டது.

மாத்தளை மாவட்டத்தின் யட்டவத்த பொலிஸ் பிரிவின் வல்பொல மற்றும் அலவத்தை கிராமம் ஆகியன தனிமைப்படுத்தப்பட்டன.

நுவரெலியா மாவட்டத்தின் நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட
வென்ச்சர்,
இன்ஜஸ்ட்ரீ,
டிலரி மற்றும்
பொகவந்தாவ பொலிஸ் பிரிவின்
கேர்கஸ்வேல்ட்,
போகவானை,
லொய்னொன்,
கொட்டியாகல,
பொகவந்தலாவை
ஹட்டன் பொலிஸ் பிரிவின் Nfield ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டன.

இ​தேவேளை, 07 மாவட்டங்களின் சில கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்