கொரோனா நோயாளர்களுக்கு அருகிலுள்ள சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை 

கொரோனா நோயாளர்களுக்கு அருகிலுள்ள சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை 

கொரோனா நோயாளர்களுக்கு அருகிலுள்ள சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை 

எழுத்தாளர் Staff Writer

17 May, 2021 | 3:33 pm

Colombo (News 1st) COVID 19 நோயாளர்களுக்கு அவர்கள் வசிக்கும் இடத்திற்கு அருகிலுள்ள சிகிச்சை நிலையங்கள் அல்லது இடைநிலை பராமரிப்பு நிலையங்களில் சிகிச்சையளிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.

சுகாதார அமைச்சரின் தலைமையில் இன்று (17) இடம்பெற்ற கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ஒருவர் தொற்றுக்குள்ளாகுமிடத்து குறித்த தொற்றாளர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களிடையே ஏற்படும் உள ரீதியான தாக்கத்தை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களினால் ஸ்தாபிக்கப்படும் சிகிச்சை நிலையங்களுக்கு தேவையான மருத்துவ உபகரணங்களை வழங்குவதற்கும் இந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த சிகிச்சை நிலையங்களுக்கு தேவையான வைத்தியர்கள், தாதியர்கள் உள்ளிட்ட உத்தியோகத்தர்களை விரைவில் பணியில் அமர்த்தவும் மேலதிக சுகாதார அதிகாரிகளை வைத்தியசாலைகள் மற்றும் மத்திய நிலையங்களிலிருந்து புதிய சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் சுட்டிக்காட்டியது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்