கடந்த 15 நாட்களில் 430 டெங்கு நோயாளர்கள்

கடந்த 15 நாட்களில் 430 டெங்கு நோயாளர்கள்

by Staff Writer 17-05-2021 | 2:44 PM
Colombo (News 1st) கடந்த 15 நாட்களில் நாடு முழுவதும் 430 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் கொழும்பு மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவின் பணிப்பாளர், வைத்தியர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார். கடந்த 15 நாட்களில் கொழும்பு மாவட்டத்தில் 150 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அதற்கயை, வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் 7,317 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.