இந்து பண்பாட்டு நிதியத்திற்கான புதிய உறுப்பினர்கள் நியமனம்

இந்து பண்பாட்டு நிதியத்திற்கான புதிய உறுப்பினர்கள் நியமனம்

எழுத்தாளர் Staff Writer

17 May, 2021 | 9:40 pm

Colombo (News 1st) இந்துப் பண்பாட்டு நிதியத்திற்கான உறுப்பினர்கள், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவினால் இன்று (17) நியமிக்கப்பட்டுள்ளனர்.

நிதியத்தின் புதிய தலைவராக புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர், பேராசிரியர் கபில குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்துப் பண்பாட்டு நிதியத்திற்கு உறுப்பினர்களை நியமிக்கும் நிகழ்வு, அலரி மாளிகையில் இன்று (17) காலை நடைபெற்றது.

இந்துப் பண்பாட்டு நிதியம் 08 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.

பேராசிரியர் கபில குணவர்தன, இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அ. உமா மகேஸ்வரன், உதவிப் பணிப்பாளர் கு. ஹேமலோஜினி ஆகியோர் பதவி வழியாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

முன்னாள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சின் செயலாளர் சாந்தி நாவுக்கரசன், மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய அறங்காவலர் சபைத் தலைவர் பெ. சுந்தரலிங்கம், ஜிந்துப்பிட்டி ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி ஆலய அறங்காவலர் சபைச் செயலாளர் ஜி.வீ. சுப்பிரமணியன், தொழிலதிபர்களான துரைசாமி விக்னேஸ்வரன், ஏ.பி. ஜெயராஜ் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்