அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் மீது தாக்குதல்

அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் மீது தாக்குதல்

அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் மீது தாக்குதல்

எழுத்தாளர் Staff Writer

17 May, 2021 | 3:59 pm

Colombo (News 1st) பிலியந்தலை – ஹெடிகம பகுதியில் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவரை தாக்கியமை தொடர்பிலான விசாரணைகளுக்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கெஸ்பேவ பிரதேச செயலாளர் பிரிவுடன் இணைந்த வகையில் சேவையாற்றி வரும் பெண் அபிவிருத்தி உத்தியோகத்தர் நேற்று (16) மாலை தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டார்.

குறித்த அபிவிருத்தி உத்தியோகத்தர், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் 5,000 ரூபா நிவாரணப் பொதியை பகிர்ந்தளித்துவிட்டு வீடு திரும்பிய போது இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்