by Staff Writer 16-05-2021 | 2:01 PM
Colombo (News 1st) பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் மக்களுக்கு தேவையான மரக்கறிகள், பழங்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை நடமாடும் சேவைகளூடாக விநியோகிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எனினும், இதற்கு பிரதேச செயலாளரின் விசேட அனுமதிப்பத்திரம் கட்டாயமானதாகும் என பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பு ஜனாதிபதி செயலணி தெரிவித்துள்ளது.
இது குறுத்து அனைத்து பிரதேச செயலாளர்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர்களுக்கு தேவையான ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலணி குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, பயணக் கட்டுப்பாடுகளுடன் மூடப்பட்ட கொழும்பு மொத்த வியாபார வர்த்தக நிலையங்கள், இன்று (16) மொத்த வியாபார நடவடிக்கைகளுக்காக மாத்திரம் திறக்கப்பட்டன.