சீரற்ற வானிலையால் 9 மாவட்ட மக்கள் பாதிப்பு

சீரற்ற வானிலையால் 9 மாவட்ட மக்கள் பாதிப்பு

சீரற்ற வானிலையால் 9 மாவட்ட மக்கள் பாதிப்பு

எழுத்தாளர் Staff Writer

16 May, 2021 | 1:44 pm

Colombo (News 1st) நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் 9 மாவட்டங்களில் 11,796 குடும்பங்களை சேர்ந்த 46,730 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

மழையுடனான வானிலையால் நால்வர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் காயமடைந்துள்ளனர்.

மூன்று வீடுகள் முழுமையாகவும் 636 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே, 6 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

காலி, களுத்துறை, கொழும்பு, கேகாலை, மாத்தறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கே மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்