AstraZeneca தடுப்பூசிக்காக WHO-உடன் கலந்துரையாடல்

AstraZeneca தடுப்பூசிகளுக்காக உலக சுகாதார ஸ்தாபனத்துடன் கலந்துரையாடியதாக அரசாங்கம் தெரிவிப்பு

by Staff Writer 15-05-2021 | 5:59 PM
Colombo (News 1st) இந்தியாவின் Serum நிறுவனத்தால் தயாரிக்கப்படும் 6 இலட்சம் AstraZeneca தடுப்பூசிகளை நாட்டுக்கு பெற்றுக்கொள்வது தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனத்துடன் கலந்துரையாடப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. தடுப்பூசித் தொகையை துரிதகதியில் பெற்றுக்கொள்வது தொடர்பில் சில நாடுகளுடன் கலந்துரையாடியுள்ளதாக கொரோனா தடுப்பூசி தொடர்பில் ஆராயும் குழுவின் தலைவர் ஜனாதிபதி ஆலோசகர் லலித் வீரதுங்க தெரிவித்தார். இதற்கமைய ஜப்பான், அவுஸ்திரேலியா, டென்மார்க் மற்றும் சுவீடன் ஆகிய நாடுகளுடன் கலந்துரையாடியுள்ளதாகவும் குறித்த நாடுகளிடமிருந்து தடுப்பூசி கிடைப்பதில் நிச்சயமற்ற நிலை காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். எவ்வாறாயினும், நாட்டிற்கு தேவையான AstraZeneca தடுப்பூசியை பெற்றுக்கொள்வது தொடர்பில் துறைசார் தரப்பினருடன் கலந்துரையாடவுள்ளதாகவும் லலித் வீரதுங்க தெரிவித்தார்.

ஏனைய செய்திகள்