கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகம் அதிகரிக்கும்

தாழமுக்கம் சூறாவளியாக வலுவடைந்துள்ளது; கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகம் அதிகரிக்கும்

by Staff Writer 15-05-2021 | 2:10 PM
Colombo (News 1st) அரபிக்கடலில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் சூறாவளியாக வலுவடைந்துள்ளது. இந்த தாழமுக்கம் எதிர்வரும் 18 ஆம் திகதி குஜராத், மற்றும் பாகிஸ்தான் கரையோரத்தை கடக்கக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. காங்கேசன்துறை தொடக்கம் மன்னார் ஊடாக கொழும்பு வரையிலான கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகம் இடைக்கிடையே மணித்தியாலத்திற்கு 60 தொடக்கம் 70 கிலோமீட்டர் வரை அதிகரிக்கக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. காங்கேசன்துறை கடற்பரப்பில் நேற்று (14) மாலை முதல் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுவதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் குறிப்பிட்டார். இதனிடையே, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இரத்தினபுரி, கேகாலை, காலி, மாத்தறை, நுவரெலியா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் 75 மில்லிமீட்டர் மழை பெய்யுமென திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.