by Staff Writer 15-05-2021 | 2:28 PM
Colombo (News 1st) சீரற்ற வானிலையால் 7 மாவட்டங்களை சேர்ந்த 2,750 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
2,750 குடும்பங்களை சேர்ந்த 11,542 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
மழையுடனான வானிலையால் கேகாலை மாவட்டத்தில் 325 குடும்பங்களைச் சேர்ந்த 1,132 பேரும் கொழும்பு மாவட்டத்தில் 270 குடும்பங்களைச் சேர்ந்த 1,115 பேரும் கம்பஹா மாவட்டத்தில் 1,385 குடும்பங்களைச் சேர்ந்த 6,119 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சீரற்ற வானிலையால் களுத்துறை, குருநாகல், மற்றும் காலி மாவட்டங்களிலும் மக்கள் பெரும் பாதிப்புகளை எதிர்நோக்கியுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
மழையுடனான வானிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக சுகாதார வழிகாட்டல்கள் வௌியிடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் இடர் முகாமைத்துவ பிரிவின் தேசிய இணைப்பாளர் மருத்துவர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
சீரற்ற மழையினால் மக்கள் இடம்பெயர நேரிடுமாயின் அந்த மக்களின் சுகாதார நலன் கருதி, சுகாதார வழிகாட்டல்கள் வௌியிடப்பட்டுள்ளதாக மருத்துவர் ஹேமந்த ஹேரத் மேலும் கூறினார்.