சீன விண்கலம் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியது

சீன விண்கலம் வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியது

by Bella Dalima 15-05-2021 | 2:42 PM
Colombo (News 1st) சீனாவின் Zhurong ரோவர் விண்கலம் வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியுள்ளது. இன்று (15) அதிகாலை குறித்த விண்கலம் செவ்வாயில் தரையிறங்கியதாக சீன அரச ஊடகம் தெரிவித்துள்ளது. 6 சக்கரங்களைக் கொண்ட Zhurong ரோவர், செவ்வாய் கிரகத்தின் வடக்கு அரைக்கோளத்தின் பரந்த நிலப்பரப்புகளை ஆராயவுள்ளது. இதுவரை காலமும் அமெரிக்காவே செவ்வாய் கிரகத்தில் ரோவர் விண்கலத்தை வெற்றிகரமாக தரையிறக்கிய நாடாக பதிவாகியிருந்தது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் சீனா அனுப்பிய Tianwen-1 விண்கல திட்டத்தின் Zhurong ரோவர் கடந்த பெப்ரவரி மாதம் செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப்பாதைக்குள் நுழைந்தது. 6 சக்கரங்களைக் கொண்ட Zhurong ரோவர் கருவியுடன் அனுப்பப்பட்ட இந்த விண்கலத்தின் மொத்த எடை 240 கிலோ ஆகும். இந்த நிலையில், தற்போது செவ்வாய் கிரகத்தில் இந்த Tianwen-1ரோவர் விண்கலம் வெற்றிகரமாக தரை இறங்கி உள்ளதாக சீனா அறிவித்துள்ளது. செவ்வாய் கிரகத்தின் மேல், கீழ் பகுதிகளின் புவியியல் அமைப்பு குறித்து இந்த விண்கலம் ஆய்வு செய்ய உள்ளது. செவ்வாய்கிரகம் தொடர்பான படங்களை எடுக்கவும் கெமராக்கள் இதில் பொருத்தப்பட்டிருக்கின்றன.