ஏப்ரல் 21 தாக்குதலின் சூத்திரதாரிகளுக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்ய முடியவில்லை: சட்டமா அதிபர்

by Staff Writer 15-05-2021 | 4:30 PM
Colombo (News 1st) தமது பதவிக்காலத்திற்குள் ஏப்ரல் 21 தாக்குதலின் சூத்திரதாரிகளுக்கு எதிராக குற்றப்பத்திரத்தை தாக்கல் செய்ய முடியாமல் போனதாக சட்டமா அதிபர் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளார். குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரின் விசாரணைகள் முழுமை பெறாததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா தெரிவித்துள்ளார். இதனால் ஏப்ரல் 21 தாக்குதலின் சூத்திரதாரிகளுக்கு எதிராக குற்றச்சாட்டுகளையும் குற்றப்பத்திரத்தையும் தாக்கல் செய்வதற்கான இயலுமை தமக்கில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.