தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் மூடப்பட்டுள்ளது

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் மூடப்பட்டுள்ளது

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் மூடப்பட்டுள்ளது

எழுத்தாளர் Staff Writer

15 May, 2021 | 2:58 pm

Colombo (News 1st) தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் இன்றும் (15) நாளையும் (16) மூடப்பட்டுள்ளது.

நாட்டின் தற்போதைய நிலையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக பொருளாதார மத்திய நிலையத்தின் வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் நேற்று (14) மாலை மூடப்பட்டதாக வர்த்தக சங்கத்தின் செயலாளர் ஷாந்த ஏக்கநாயக்க குறிப்பிட்டார்.

மத்திய நிலையத்தின் வர்த்தக நடவடிக்கைள் எதிர்வரும் திங்கட்கிழமை காலை 5 மணி முதல் மீண்டும் ஆரம்பமாகும் எனவும் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தின் வர்த்தக சங்கத்தின் செயலாளர் மேலும் கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்