தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய 253 பேர் கைது

தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய 253 பேர் கைது

தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய 253 பேர் கைது

எழுத்தாளர் Staff Writer

15 May, 2021 | 3:16 pm

Colombo (News 1st) தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய 253 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஒக்டோபர் மாதம் முதல் இதுவரை 9 ,282 பேர் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனிடையே, மேல் மாகாணத்திலிருந்து வௌியேறும் மற்றும் உட்பிரவேசிக்கும் 14 பகுதிகளில் நேற்று 1,967 வாகனங்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளன.

இதில் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய பெரும்பாலானோர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் கூறினார்.

பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், அருகிலுள்ள மருந்தகங்களுக்கு செல்வதற்கு மக்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

திடீர் சுகயீனம் ஏற்படும் பட்சத்தில், வைத்தியசாலைக்கு செல்வதற்கும் இக்காலகட்டத்தில் சந்தர்ப்பம் அளிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

பயணக்கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டுள்ளதால், பொதுப்போக்குவரத்து மற்றும் வாடகை வாகனங்களின் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

அத்தியாவசிய பொருள் விநியோக நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்