சீன விண்கலம் வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியது

சீன விண்கலம் வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியது

சீன விண்கலம் வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியது

எழுத்தாளர் Bella Dalima

15 May, 2021 | 2:42 pm

Colombo (News 1st) சீனாவின் Zhurong ரோவர் விண்கலம் வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியுள்ளது.

இன்று (15) அதிகாலை குறித்த விண்கலம் செவ்வாயில் தரையிறங்கியதாக சீன அரச ஊடகம் தெரிவித்துள்ளது.

6 சக்கரங்களைக் கொண்ட Zhurong ரோவர், செவ்வாய் கிரகத்தின் வடக்கு அரைக்கோளத்தின் பரந்த நிலப்பரப்புகளை ஆராயவுள்ளது.

இதுவரை காலமும் அமெரிக்காவே செவ்வாய் கிரகத்தில் ரோவர் விண்கலத்தை வெற்றிகரமாக தரையிறக்கிய நாடாக பதிவாகியிருந்தது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் சீனா அனுப்பிய Tianwen-1 விண்கல திட்டத்தின் Zhurong ரோவர் கடந்த பெப்ரவரி மாதம் செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப்பாதைக்குள் நுழைந்தது. 6 சக்கரங்களைக் கொண்ட Zhurong ரோவர் கருவியுடன் அனுப்பப்பட்ட இந்த விண்கலத்தின் மொத்த எடை 240 கிலோ ஆகும்.

இந்த நிலையில், தற்போது செவ்வாய் கிரகத்தில் இந்த Tianwen-1ரோவர் விண்கலம் வெற்றிகரமாக தரை இறங்கி உள்ளதாக சீனா அறிவித்துள்ளது.

செவ்வாய் கிரகத்தின் மேல், கீழ் பகுதிகளின் புவியியல் அமைப்பு குறித்து இந்த விண்கலம் ஆய்வு செய்ய உள்ளது. செவ்வாய்கிரகம் தொடர்பான படங்களை எடுக்கவும் கெமராக்கள் இதில் பொருத்தப்பட்டிருக்கின்றன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்