ஒலிம்பிக் விழாவை இரத்து செய்யக் கோரி ஜப்பானியர்கள் விண்ணப்பம்

ஒலிம்பிக் விழாவை இரத்து செய்யக் கோரி ஜப்பானியர்கள் விண்ணப்பம்

ஒலிம்பிக் விழாவை இரத்து செய்யக் கோரி ஜப்பானியர்கள் விண்ணப்பம்

எழுத்தாளர் Bella Dalima

15 May, 2021 | 3:27 pm

Colombo (News 1st) டோக்கியோ ஒலிம்பிக் விழாவிற்கு இன்னும் 10 வாரங்களே உள்ள நிலையில், அதனை இரத்து செய்யுமாறு கோரி சுமார் 3,50,000 கையொப்பங்களுடனான விண்ணப்பத்தை ஜப்பான் பிரஜைகள் சமர்ப்பித்துள்ளனர்.

ஒலிம்பிக் மற்றும் பராலிம்பிக் குழு அதிகாரிகளுக்கும் டோக்கியோ ஆளுநருக்கும் குறித்த விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஜப்பானுக்கு விஜயம் மேற்கொள்ளும் சுற்றுலாப் பயணிகளையும், விளையாட்டு வீரர்களையும் ஏக மனதுடன் ஏற்றுக்கொள்ளக்கூடிய சூழலில் மாத்திரமே ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்பட வேண்டும் என ஜப்பான் பிரஜைகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாளாந்தம் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால், டோக்கியோ உள்ளிட்ட முக்கிய நகரங்களில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்