ஏப்ரல் 21 தாக்குதலின் சூத்திரதாரிகளுக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்ய முடியவில்லை: சட்டமா அதிபர்

ஏப்ரல் 21 தாக்குதலின் சூத்திரதாரிகளுக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்ய முடியவில்லை: சட்டமா அதிபர்

எழுத்தாளர் Staff Writer

15 May, 2021 | 4:30 pm

Colombo (News 1st) தமது பதவிக்காலத்திற்குள் ஏப்ரல் 21 தாக்குதலின் சூத்திரதாரிகளுக்கு எதிராக குற்றப்பத்திரத்தை தாக்கல் செய்ய முடியாமல் போனதாக சட்டமா அதிபர் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளார்.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரின் விசாரணைகள் முழுமை பெறாததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா தெரிவித்துள்ளார்.

இதனால் ஏப்ரல் 21 தாக்குதலின் சூத்திரதாரிகளுக்கு எதிராக குற்றச்சாட்டுகளையும் குற்றப்பத்திரத்தையும் தாக்கல் செய்வதற்கான இயலுமை தமக்கில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்