முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி உடைப்பு அரசின் காட்டுமிராண்டித்தனமான செயற்பாடு: சி.வி.விக்னேஸ்வரன்

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி உடைப்பு அரசின் காட்டுமிராண்டித்தனமான செயற்பாடு: சி.வி.விக்னேஸ்வரன்

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி உடைப்பு அரசின் காட்டுமிராண்டித்தனமான செயற்பாடு: சி.வி.விக்னேஸ்வரன்

எழுத்தாளர் Staff Writer

14 May, 2021 | 4:09 pm

Colombo (News 1st) முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி உடைக்கப்பட்டமையும் புதிதாக நடுவதற்காகக் கொண்டுவரப்பட்டிருந்த நடுகைக்கல் அகற்றப்பட்டமையும் அரசாங்கத்தின் காட்டுமிராண்டித்தனமான, நாகரிகமற்ற செயற்பாடு என பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு எத்தகைய கேவலமான செயற்பாடுகளையும் செய்யலாம் என்ற சிந்தனையில் செயற்படும் தற்போதைய அரசாங்கம் தனது தலையில் தானே மண்ணை வாரிக் கொட்டிக்கொள்வதாக சி.வி.விக்னேஸ்வரன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்காலில் நடைபெற்றது இனப்படுகொலை என்பதை உலகம் வெகு விரைவில் ஏற்றுக்கொள்ளும் எனவும்
அரசாங்கத்தின் இத்தகைய முட்டாள்தனமான செயற்பாடுகளினால் இந்த உண்மையை மறைக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்