முள்ளிவாய்க்கல் நினைவுத்தூபி உடைப்பு: பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம் கண்டனம்

முள்ளிவாய்க்கல் நினைவுத்தூபி உடைப்பு: பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம் கண்டனம்

எழுத்தாளர் Staff Writer

14 May, 2021 | 4:27 pm

Colombo (News 1st) முள்ளிவாய்க்கல் இன அழிப்பு நினைவுச்சின்னத்தினை இடித்தழித்த ஈனச்செயலை வன்மையாக் கண்டிப்பதாக பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம் தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம் அறிக்கையொன்றை வௌியிட்டுள்ளது.

மிகவும் அமைதியான முறையில் நாட்டின் சட்ட ஒழுங்குமுறை சுகாதார விதிமுறைகளை பின்பற்றி அருட்தந்தையர்கள் இணைந்து முள்ளிவாய்கால் நினைவு முற்றத்தில் நடுகல்லினை நடுவதற்கு முற்பட்டவேளை அங்கு திரண்ட பொலிஸாரும் இராணுவத்தினரும் நடுகல்லினை பதிக்கவிடாது முரண்பட்டும் அருட்தந்தையர்களை அச்சுறுத்தியும் பெரும் குழப்பத்தினை ஏற்படுத்தியதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இவ்வாறான செயற்பாடுகள் இனிமேலும் நடக்காதபடி நீதிக்காகவும் மானிட நேயத்திற்காகவும் உண்மைக்காகவும் ஒன்றிணைந்து செயற்படுமாறு சர்வதேச சமூகத்தையும் மானிடநேய செயற்பாட்டாளர்களையும் வலியுறுத்துவதாக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஶ்ரீதரன் யாழ்ப்பாணத்தில் இன்று ஊடகவியலாளர் சந்திபொன்றை நடத்தி, முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி உடைப்பிற்கு கண்டனம் வௌியிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்