மட்டக்களப்பு, திருகோணமலை, குருநாகலில் 42 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்படவுள்ளன

மட்டக்களப்பு, திருகோணமலை, குருநாகலில் 42 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்படவுள்ளன

மட்டக்களப்பு, திருகோணமலை, குருநாகலில் 42 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்படவுள்ளன

எழுத்தாளர் Staff Writer

14 May, 2021 | 2:05 pm

Colombo (News 1st) எதிர்வரும் 17 ஆம் திகதி அதிகாலை 4 மணி முதல் அமுலாகும் வகையில் 3 மாவட்டங்களின் 42 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்படவுள்ளன.

இதனடிப்படையில், மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலுள்ள 42 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 150 C கிராம உத்தியோகத்தர் பிரிவின், நெசவு நிலைய வீதி, வேலாப்பொடி வீதி, கண்ணகி அம்மன் ஆலய வீதி பகுதியும், 150 B கிராம உத்தியோகத்தர் பிரிவின் வாவிக்கரை வீதி, விதானையார் வீதி, அப்புகாமி வீதி ஆகிய பகுதிகளும் தனிமைப்படுத்தப்படவுள்ளன.

திருகோணமலை மாவட்டத்தின், கிண்ணியா பொலிஸ் பிரிவின் கிண்ணியா, பெரிய கிண்ணியா, குட்டிகராச்சி, எஹுதார் நகர், பெரியாற்றுமுனை, மாலிந்துரை, ரஹூமானியா நகர், சின்ன கிண்ணியா, மாஞ்சோலை, கட்டையாறு, குறிஞ்சாக்கேணி, முனைச்சேனை, ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்படவுள்ளன.

குருநாகல் மாவட்டத்தின், கிரியுல்ல பொலிஸ் பிரிவிற்குபட்ட ஹமன்கல்ல, நாராங்கொட வடக்கு, நாராங்கொட தெற்கு, படபொதெல்ல, மல்கமுவ,தொடம்பொத்த, நாரங்கமுவ, வத்தேகெதர, கட்டுகம்பள, கவுடுமுன்ன, ஹமானாகொட வெத்தேவ ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும், மும்மானா, மாகரகம, பஹல மெத்தேபொல, இஹல மெத்தேபொல, கொந்துருவாவல, மாகின்கமுவ, சியம்பலாவன, போபிட்டிய, இஹல லப்பல, பஹல லப்பல, மத்தேகம, வெல்லேவ ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக இராணுவத்தளபதி தெரிவித்தார்.

இதனிடையே தனிமைப்படுத்தப்பட்ட சில பகுதிகளும் விடுவிக்கப்படவுள்ளன.

இதனடிப்படையில், திருகோணமலை மாவட்டத்தின் உப்புவௌி பொலிஸ் பிரிவின் ஆண்டான்குளம் – சுபத்ராலங்கார வீதியும்,
சீனன்குடா பொலிஸ் பிரிவின் கவட்டிகுடா கிராம உத்தியோகத்தர் பிரிவின் விஜேரத்ன வீதியும் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்படவுள்ளன.

அத்துடன், களுத்துறை மாவட்டத்தின் தொடங்கொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட போபுவல வடமேற்கு, போபுவல தென்மேற்கு, போபுவல வடமத்திய, போபுவல தென்மத்திய, போபுவல வடகிழக்கு, போபுவல தென் கிழக்கு ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்படவுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்