தெற்கு அதிவேக வீதியின் கொட்டாவை, கடுவெல பகுதிகளிலுள்ள 8 நுழைவாயில்களை மீள திறக்க தீர்மானம்

தெற்கு அதிவேக வீதியின் கொட்டாவை, கடுவெல பகுதிகளிலுள்ள 8 நுழைவாயில்களை மீள திறக்க தீர்மானம்

தெற்கு அதிவேக வீதியின் கொட்டாவை, கடுவெல பகுதிகளிலுள்ள 8 நுழைவாயில்களை மீள திறக்க தீர்மானம்

எழுத்தாளர் Staff Writer

14 May, 2021 | 6:49 pm

Colombo (News 1st) கொரோனா தொற்றினால் மூடப்பட்ட தெற்கு அதிவேக வீதியின் கொட்டாவை மற்றும் கடுவெல பகுதிகளிலுள்ள 8 நுழைவாயில்களை இன்று (14) முதல் மீள திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கடுவெல பகுதியிலுள்ள உட்பிரவேசிக்கும் 2 நுழைவாயில்களும் வௌியேறும் 02 நுழைவாயில்களும் , கொட்டாவ பகுதியிலுள்ள உட்பிரவேசிக்கும் 02 நுழைவாயில்களும், வௌியேறும் 2 நுழைவாயில்களும் திறக்கப்படவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந்த பகுதிகளிலுள்ள ஏனைய நுழைவாயில்கள் எதிர்வரும் நாட்களில் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு அதிவேக வீதியில் தொடர்ந்தும் மூடப்பட்டுள்ள கொத்தலாவல, வெலிபென்ன மற்றும் இமதுவ ஆகிய பகுதிகளிலுள்ள நுழைவாயில்களையும் விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்