சீரற்ற வானிலை காரணமாக மூவர் உயிரிழப்பு

சீரற்ற வானிலை காரணமாக மூவர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

14 May, 2021 | 8:25 pm

Colombo (News 1st) நாட்டில் நிலவிய வானிலை மாற்றத்தினால் சில அனர்த்தங்கள் பதிவாகியுள்ளன.

கேகாலை மாவட்டத்தின் வரக்காபொல – தொரவக்க பகுதியில் இன்று மாலை மண்சரிவு ஏற்பட்டது.

அத்துடன், குறித்த பிரதேசத்தில் மண்மேடு சரிந்து வீழ்ந்த அனர்த்தங்களினால் சுமார் 100 வீடுகள் வரை முற்றாகவும் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

வரக்காபொல – தஸ்னாவ பகுதியில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் 54 வயதான ஒருவர் உயிரிழந்ததுடன், காயமடைந்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சியஒலாகெலே பகுதியை சேர்ந்த 53 வயதான ஒருவர் வாரியபொல – மகுருஓயாவில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார்.

கடும் மழையை அடுத்து காலி – நாகியாதெனிய பகுதியில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட 31 வயதானவர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டார்.

ஹற்றன் கினிகத்தேன பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் காயமடைந்த மூவர், நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்