இந்தோனேசியா, ஜப்பான், மலேசியாவில் நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை

இந்தோனேசியா, ஜப்பான், மலேசியாவில் நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை

இந்தோனேசியா, ஜப்பான், மலேசியாவில் நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை

எழுத்தாளர் Bella Dalima

14 May, 2021 | 3:08 pm

Colombo (News 1st) இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ராவின் மேற்கு கரையோரத்தை அண்மித்த பகுதியில் 6.7 மெக்னிட்யூட் நில அதிர்வு பதிவாகியுள்ளது.

எனினும், இந்தோனேசிய வானிலை மற்றும் புவிச்சரிதவியல் நிறுவகம் 7.2 மெக்னிட்யூட் அளவில் நில அதிர்வு பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்த நில அதிர்வு காரணமாக அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.

இதேவேளை, ஜப்பானின் கிழக்கு கடற்கரை பகுதியில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 6 அலகுகளாகப் பதிவானதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஹோன்சு கிழக்கு கடற்கரை பகுதியில் காலை 5.28 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், ஜப்பானிலும் சுனாமி அபாய எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.

இதேவேளை, மலேசியத் தலைநகர் கோலாலம்பூரிலும் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

கோலாலம்பூருக்கு தென்கிழக்கே 642 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.6 என பதிவாகியுள்ளது.

சரியாக இன்று பிற்பகல் 12.03 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த விவரம் இன்னும் வெளியாகவில்லை.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்