விசாக்களின் செல்லுபடிக் காலம் மேலும் 60 நாட்களுக்கு நீடிப்பு

விசாக்களின் செல்லுபடிக் காலம் மேலும் 60 நாட்களுக்கு நீடிப்பு

விசாக்களின் செல்லுபடிக் காலம் மேலும் 60 நாட்களுக்கு நீடிப்பு

எழுத்தாளர் Bella Dalima

13 May, 2021 | 5:34 pm

Colombo (News 1st) இலங்கையில் தங்கியுள்ள வௌிநாட்டு பிரஜைகளின் விசா செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, அனைத்து வகையான விசாக்களுக்குமான செல்லுபடிக் காலம் மேலும் 60 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு, குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்த அறிவிப்பு கடந்த 11 ஆம் திகதி தொடக்கம் எதிர்வரும் ஜூலை 09 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்தியாவசிய தேவைகள் ஏதேனும் காணப்படும் பட்சத்தில், குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பிராந்திய அல்லது தலைமை அலுவலகத்தை தொலைபேசியூடாகவோ அல்லது மின்னஞ்சலூடாகவோ தொடர்புகொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்