மாஸ்க், சமூக இடைவெளியின்றி நடைபெற்ற Brit விருது விழா

மாஸ்க், சமூக இடைவெளியின்றி நடைபெற்ற Brit விருது விழா

மாஸ்க், சமூக இடைவெளியின்றி நடைபெற்ற Brit விருது விழா

எழுத்தாளர் Bella Dalima

13 May, 2021 | 4:01 pm

Colombo (News 1st) இங்கிலாந்தின் மிக பிரபலமான இசை விழாவான பிரிட் இசை விருது விழா (Brit Awards) பிரம்மாண்டமாக நடத்தப்பட்டுள்ளது.

இவ்விருது விழா, லண்டனில் உள்ள O2 Arena-வில் நடத்தப்பட்டது. இதில் 4,000 பேர் கலந்து கொண்டனர்.

இதில் கலந்துகொள்பவர்கள், மாஸ்க் அணியத் தேவையில்லை, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டிய அவசியமில்லை என்று முன்னதாகவே தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படியே அனைவரும் கலந்துகொண்டனர்.

கொரோனாவிற்கு பின் பெரிய நிகழ்ச்சிகளுக்கு எத்தனை பேரை அனுமதிக்கலாம் என்பதற்கு முன்னோட்டமாக இந்த விருது விழா நடத்தப்பட்டது. மேலும் இதில் கலந்துகொண்ட 4,000 பேரில் 2,500 பேர் முன்களப் பணியாளர்கள் மற்றும் 1,500 பேர் கார்ப்பரேட் நிறுவனங்களை சேர்ந்தவர்களாவர்.

நிகழ்ச்சிக்கு முன்னதாக 4000 பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, அதில் தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டவர்கள் மட்டுமே கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டனர்.

மேலும், நிகழ்ச்சி முடிந்த பின்னரும் அவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இவ்விருது விழாவில், பெண்களே உயரிய விருதுகளை வென்று ஆதிக்கம் செலுத்தினர். டுவா லிபா, லிட்டில் மிக்ஸ், டெய்லர் ஷிப்ட் ஆகியோர் உயரிய விருதுகளை வென்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்