சில பகுதிகளில் ஆழ்கடல் மீன்பிடிக்கு அனுமதி இடைநிறுத்தம்

சில பகுதிகளில் ஆழ்கடல் மீன்பிடிக்கு அனுமதி இடைநிறுத்தம்

சில பகுதிகளில் ஆழ்கடல் மீன்பிடிக்கு அனுமதி இடைநிறுத்தம்

எழுத்தாளர் Bella Dalima

13 May, 2021 | 3:21 pm

Colombo (News 1st) சில பகுதிகளில் ஆழ்கடல் மீன்பிடிக்கு செல்வதற்கான அனுமதி இன்று (13) முதல் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்படுவதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மயிலிட்டி, பேருவளை, திக்கோவிட்ட, பிட்டபன, கல்பிட்டி ஆகிய மீன்பிடி துறைமுகங்களிலிருந்து ஆழ்கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கான அனுமதியே இன்று முதல் இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரபிக்கடலின் வடக்கு திசையில் ஏற்பட்டுள்ள சீரற்ற தாழமுக்கம் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டின் தென்மேற்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் இன்று 100 மில்லிமீட்டர் வரை மழை பெய்யலாம் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழையின் போது பலத்த காற்று வீசக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்