2530 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகிய பிரதேசங்கள்

2530 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகிய பிரதேசங்கள்

by Chandrasekaram Chandravadani 12-05-2021 | 10:24 AM
Colombo (News 1st) இன்று (12) காலை வரையான 24 மணி நேரத்தில் நாட்டில் புதிதாக 2,568 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அவர்களில் 38 பேர் வௌிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்களாவர். ஏனையோரில் கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். கொழும்பு மாவட்டத்தில் 606 பேருக்கும் கம்பஹா மாவட்டத்தில் 300 பேருக்கும் கண்டி மாவட்டத்தில் 110 பேருக்கும் நுவரெலியா மாவட்டத்தில் 64 பேருக்கும் யாழ். மாவட்டத்தில் 61 பேருக்கும் புத்தளம் மாவட்டத்தில் 37 பேருக்கும் பதுளை மாவட்டத்தில் 29 பேருக்கும் அம்பாறை மாவட்டத்தில் 27 பேருக்கும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 27 பேருக்கும் கிளிநொச்சி மாவட்டத்தில் 25 பேருக்கும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 24 பேருக்கும் திருகோணமலை மாவட்டத்தில் 23 பேருக்கும் வவுனியா மாவட்டத்தில் ஐவருக்கும் கேகாலை மாவட்டத்தில் 06 பேருக்கும் கடந்த 24 மணி நேரத்தில் தொற்று உறுதியாகியுள்ளது. கொழும்பு - கோட்டை பகுதியில் 07 பேருக்கும் கொம்பனித்தெரு பகுதியில் நால்வருக்கும் கொள்ளுப்பிட்டி பகுதியில் 14 பேருக்கும் பம்பலப்பிட்டி பகுதியில் 06 பேருக்கும் வௌ்ளவத்தை பகுதியில் 07 பேருக்கும் பொரளை பிரதேசத்தில் 10 பேருக்கும் தெமட்டகொடை பகுதியில் 08 பேருக்கும் கிரேண்ட்பாஸ் பிரதேசத்தில் 06 பேருக்கும் மட்டக்குளி பகுதியில் ஐவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று (12) வரை நாட்டில் மொத்தமாக 131,098 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றைய தினம் (11) 23 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டன. இதன்பிரகாரம், நாட்டில் உறுதி செய்யப்பட்டுள்ள கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 850 ஆக உயர்வடைந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இரத்மலானை, பொலன்னறுவை (இருவர்), பிலிமத்தலாவ, நுவரெலியா, தலவாக்கலை, ஹல்க்ரன்ஓயா, மாத்தளை (மூவர்), எல்கடுவ, மடுல்கலே (இருவர்), மாத்தறை, மெனிக்ஹின்ன, தல்கஸ்வல, மொரொன்துடுவ, மஹரகம, ஹல்தொட்ட, வஸ்கடுவ, களனி, மொறட்டுவை மற்றும் பாணந்துறை ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 23 பேரே இவ்வாறு தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளனர். இந்தநிலையில், கொரோனா தொற்று பரவல் காரணமாக மேலும் 13 கிராம சேவகர் பிரிவுகள் இன்று (12) முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்தார்.