நடிகர் நெல்லை சிவா காலமானார்

நடிகர் நெல்லை சிவா காலமானார்

by Chandrasekaram Chandravadani 12-05-2021 | 12:07 PM
நகைச்சுவை நடிகர் நெல்வை சிவா, மாரடைப்பு காரணமாக தனது 69 ஆவது வயதில் நேற்று (11) காலமானார். திருநெல்வேலியில் உள்ள அவரது வீட்டிலேயே உயிரிழந்துள்ளார். 'ஆண் பாவம்' திரைப்படத்தின் மூலம் இவர் திரையுலகில் அறிமுகமானார். இவர் தனது நெல்லை பேச்சின் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை அமைத்துக்கொண்டார். திரைப்படங்களில் மட்டுமல்லாது சீரியல்களிலும் இவர் தனது நடிப்புத் திறமையை வௌிப்படுத்தி வந்தார். நெல்லை சிவாவின் மரணத்திற்கு திரையுலகத்தினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.