இன்று 1429 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இன்று 1429 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது

by Staff Writer 12-05-2021 | 8:43 PM
Colombo (News 1st) இலங்கையில் இன்று 1429 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அத்தோடு, இன்று 1016 நோயாளர்கள் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இதற்கமைய, இலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,07,657 ஆக அதிகரித்துள்ளது. நேற்று (11) மேலும் 23 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டன. இதற்கமைய கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 850 ஆக அதிகரித்துள்ளது. 46 வயதுக்கும் 84 வயதுக்கும் இடைப்பட்டவர்களே தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.