மேல் மாகாணத்தில் வசிப்போருக்கு இன்றும் தடுப்பூசி ஏற்றப்பட்டது

மேல் மாகாணத்தில் வசிப்போருக்கு இன்றும் தடுப்பூசி ஏற்றப்பட்டது

எழுத்தாளர் Staff Writer

12 May, 2021 | 9:01 pm

Colombo (News 1st) இன்று (12) பல பகுதிகளில் COVID தடுப்பூசிகள் ஏற்றப்பட்டன.

மேல் மாகாணத்தில் வசிப்போருக்கு முப்படையினரின் ஒத்துழைப்புடன் Sinopharm தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இன்றும் முன்னெடுக்கப்பட்டது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட இடங்களில் தடுப்பூசி ஏற்றப்பட்டது.

நாளாந்தம் சுமார் 30,000 பேருக்கு Sinopharm முதலாவது தடுப்பூசியை ஏற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக COVID நோய் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர், விசேட வைத்திய நிபுணர் டொக்டர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார்.

eChannel சேவை ஊடாக தடுப்பூசி ஏற்றுவதற்கான நேரத்தை ஒதுக்கிக்கொள்ள மக்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்