மேலும் 13 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டன

மேலும் 13 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டன

மேலும் 13 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டன

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

12 May, 2021 | 8:34 am

Colombo (News 1st) ஆறு மாவட்டங்களின் 13 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

அதனடிப்படையில்,

கொழும்பு மாவட்டத்தின் பிலியந்தலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொலமுன்ன மற்றும் மாம்பே மேற்கு ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள.

கம்பஹா மாவட்டத்தின் மஹபாகே பொலிஸ் பிரிவின் கீழுள்ள எலபிட்டிவல நவம்மஹர மற்றும் மகுல்பொக்குண வீதி ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

காலி மாவட்டத்தின் இமதுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திக்கும்புற கிராம சேவகர் பிரிவு மற்றும் அஹங்கம பொலிஸ் பிரிவின் அடானிகித்த கிராம சேவகர் பிரிவு ஆகியன முடக்கப்பட்டுள்ளன.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் சூரியவெவ நகர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

இரத்தினபுரி மாவட்டத்தின் பெல்மடுல்ல பொலிஸ் பிரிவின் சன்னஸ்கம, தொடகஸ்வின்ன, கொடகம ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் மற்றும் கஹவத்தை பொலிஸ் பிரிவின்  கட்டாங்கே 03 ஆம் பிரிவு ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

கேகாலை மாவட்டத்தின் புளத்கொஹுபிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடபொத்த மற்றும் கெந்தாவ கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதனிடையே, களுத்துறை மாவட்டத்தின் தொடங்கொடபொலிஸ் பிரிவிற்குட்பட்ட அதிகாரிகொட கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி குறிப்பிட்டார்..

அத்துடன், கம்பஹா மாவட்டத்தின் கொட்டதெனிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட களுஅக்கல மற்றும் பொல்ஹேன கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் தளர்த்தப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்