இன்று (12) முதல் நாடளாவிய ரீதியில் இரவு நேர பயணத் தடை

இன்று (12) முதல் நாடளாவிய ரீதியில் இரவு நேர பயணத் தடை

இன்று (12) முதல் நாடளாவிய ரீதியில் இரவு நேர பயணத் தடை

எழுத்தாளர் Staff Writer

12 May, 2021 | 1:02 pm

Colombo (News 1st) இன்று (12) முதல் அமுலாகும் வகையில் இரவு 11 மணி தொடக்கம் அதிகாலை 04 மணி வரை நாடளாவிய ரீதியில் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

இந்தப் பயணத் தடையானது எதிர்வரும் 31ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என அவர் மேலும் கூறினார்.

இதற்கமைய, இரவு 11 மணி தொடக்கம் அதிகாலை 04 மணி வரை மக்கள் தமது வீடுகளிலேயே அல்லது தங்கியிருக்கும் இடங்களிலிலேயே இருத்தல் வேண்டும் என இராணுவத் தளபதி சுட்டிக்காட்டினார்.

உணவு உள்ளிட்ட அத்தியவசிய பொருட்களுக்கான போக்குவரத்து சேவைகள் மற்றும் ஏனைய அத்தியவசிய சேவைகளுக்கு இந்த பயணத் தடை பொருந்தாது என இராணுவத் தளபதி மேலும் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்