இந்தியாவில் உருமாறிய கொரோனா வைரஸ் உலகின் 44 நாடுகளில் பரவியுள்ளது: உலக சுகாதார நிறுவனம் தெரிவிப்பு

இந்தியாவில் உருமாறிய கொரோனா வைரஸ் உலகின் 44 நாடுகளில் பரவியுள்ளது: உலக சுகாதார நிறுவனம் தெரிவிப்பு

இந்தியாவில் உருமாறிய கொரோனா வைரஸ் உலகின் 44 நாடுகளில் பரவியுள்ளது: உலக சுகாதார நிறுவனம் தெரிவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

12 May, 2021 | 4:02 pm

Colombo (News 1st) இந்தியாவில் உருமாற்றம் அடைந்த (திரிபடைந்த) கொரோனா வைரஸ் உலகின் 44 நாடுகளில் பரவியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக உலக நாடுகள் பலவும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன.

தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த பிற நாடுகளுடனான போக்குவரத்தை துண்டித்தும் நடவடிக்கை மேற்கொண்டும் வருகின்றன.

இந்நிலையில், கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் உருமாற்றமடைந்த B.1.617 எனும் கொரோனா வைரஸ் இந்தியாவில் கண்டறியப்பட்டது. இந்த உருமாற்றமடைந்த கொரோனா வைரஸ் உலகின் 44 நாடுகளில் தற்போது பரவியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதேபோல் பிரிட்டன், தென்னாபிரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் பல்வேறு நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக உலக சுகாதார நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்