Colombo (News 1st) இலங்கை அணியுடன் நடைபெறவுள்ள சர்வதேச ஒருநாள் மற்றும் சர்வதேச T20 தொடர்களுக்கான போட்டி அட்டவணையை இங்கிலாந்து கிரிக்கெட் சபை வௌியிட்டுள்ளது.
மூன்று போட்டிகளைக் கொண்ட சர்வதேச T20 தொடர் எதிர்வரும் ஜூன் 23 ஆம் திகதி கார்டிப்பில் ஆரம்பமாகவுள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு அணிகளுக்குமிடையிலான 3 சர்வதேச ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் ஜூன் 29 ஆம் திகதி டர்ஹமில் ஆரம்பமாகவுள்ளது.
இதேவேளை, இந்த காலப்பகுதியில் இந்தியாவுடனும் இலங்கை அணி விளையாடவுள்ளதாக இந்திய கிரிக்கெட் சபை சமீபத்தில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
