COVID ஒழிப்பு போராட்டத்தில் எதிர்க்கட்சியும் இணைவு

by Staff Writer 11-05-2021 | 8:48 PM
Colombo (News 1st) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் எண்ணக்கருவிற்கு அமைய ''எதிர்க்கட்சியிடமிருந்து சுவாசம்'' எனும் தொனிப்பொருளில் COVID தொற்றை எதிர்கொள்வதற்கான வேலைத்திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளது. சுகாதார சேவைக்கு தேவையான சுகாதார வைத்திய உபகரணங்களை இயலுமான வரையில் வைத்தியசாலைகளுக்கு வழங்கும் வேலைத்திட்டம் இதனூடாக முன்னெடுக்கப்படுகிறது. ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் குழுக்கள், உள்நாட்டு - வெளிநாட்டு அன்பளிப்பாளர்கள், ஐக்கிய மக்கள் சக்தியின் பாரிய வெளிநாட்டு வலையமைப்பு மூலம் கிடைக்கும் நன்கொடைகள் மூலம் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.