COVID: இன்று 1,225 பேருக்கு தொற்று

COVID: இதுவரை 827 பேர் உயிரிழப்பு, இன்று 1,225 பேருக்கு புதிதாக தொற்று

by Bella Dalima 11-05-2021 | 7:33 PM
Colombo (News 1st) இன்று (11) இதுவரை 1,225 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1,29,755 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 1,06,641 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர். நாட்டில் அதிகூடிய கொரோனா மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று உறுதி செய்யப்பட்டன. நேற்று மாத்திரம் 26 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. கடந்த 03 ஆம் திகதி தொடக்கம் நேற்று (10) வரை உயிரிழந்தவர்களில் 26 பேரின் மரணங்களே இவ்வாறு உறுதி செய்யப்பட்டுள்ளன. கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களில் 03 மாத சிசுவொன்றும் அடங்குவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 827 ஆக அதிகரித்துள்ளது.