கொரோனா தொற்றாளர்கள் பதிவாகிய பிரதேசங்கள்

கொரோனா தொற்றாளர்கள் பதிவாகிய பிரதேசங்கள்

by Chandrasekaram Chandravadani 11-05-2021 | 11:13 AM
Colombo (News 1st) கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் புதிதாக 2,624 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அவர்களில் 51 பேர் வௌிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்களாவர். ஏனையோரில் கம்பஹா மாவட்டத்திலேயே அதிக தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். கம்பஹா மாவட்டத்தில் 551 பேரும் கொழும்பு மாவட்டத்தில் 321 பேரும் பதுளை மாவட்டத்தில் 23 பேரும் அம்பாறை மாவட்டத்தில் 13 பேரும் திருகோணமலை மாவட்டத்தில் 36 பேரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒருவரும் நுவரெலியா மாவட்டத்தில் 184 பேரும் கண்டி மாவட்டத்தில் 50 பேரும் புத்தளம் மாவட்டத்தில் 46 பேரும் யாழ். மாவட்டத்தில் 109 பேரும் கிளிநொச்சி மாவட்டத்தில் 22 பேரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 26 பேரும் கடந்த 24 மணி நேரத்தில் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொழும்பு - கொள்ளுப்பிட்டி பகுதியில் இருவருக்கும் பொரளை பிரதேசத்தில் நால்வருக்கும் தெமட்டகொடை பகுதியில் 08 பேருக்கும் மட்டக்குளி பிரதேசத்தில் 07 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. திருகோணமலை பிரதேசத்தில் 18 பேருக்கும் அக்போபுர பகுதியில் ஐவருக்கும் கோமறன்கடவல பகுதியில் 06 பேருக்கும் கந்தளாயில் நால்வருக்கும் சூரியபுர பகுதியில் ஒருவருக்கும் தம்பலகாமம் பகுதியில் இருவருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. நாட்டில் இதுவரை மொத்தமாக 128,530 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நேற்றைய தினம் (10) 26 கொரோனா மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதி செய்யப்பட்டது. அதனடிப்படையில், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி மரணித்தோரின் எண்ணிக்கை 827 ஆக உயர்வடைந்துள்ளது. யாழ்ப்பாணம் (இருவர்), காலி, ஹெட்டிபொல, பல்லேவெல, கண்டி, மத்துகம, பாதுக்க, நேபட (இருவர்), மீகஹகொட, களுத்துறை (இருவர்), அக்குரஸ்ஸ, மொரொன்துடுவ, அனுராதபுரம், கொழும்பு – 06, களுஅக்கல, மொறட்டுவை, மள்வானை, பொரளை, கொழும்பு – 15, கந்தானை, மாஸ்வெல, வத்தேகம மற்றும் மாலபே ஆகிய பிரதேசங்களை 26 பேரே இவ்வாறு தொற்றுக்குள்ளாகி மரணித்துள்ளனர். இவர்களில் 3 மாத சிசு ஒன்றும் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது. இதனிடையே, கொரோனா தொற்று பரவல் காரணமாக நாட்டின் சில பகுதிகள் இன்று காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்தார். புத்தளம் மாவட்டத்தின் மெத கிரிமட்டியான பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. மாத்தறை மாவட்டத்தின் உயன்வத்த, உயன்வத்த வடக்கு கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. மாத்தளை மாவட்டத்தின் உடஹப்புவிட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவு முடக்கப்பட்டுள்ளது. கண்டி மாவட்டத்தின் வல்கம்பாய கிராம சேவகர் பிரிவின் திப்புட்ட கிராமம் மற்றும் கொஸ்கஸ்தன்ன ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அதேநேரம், குருநாகல் மாவட்டத்தின் நிகதலுபொத்த கிராம உத்தியோகத்தர் பிரிவு தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்தார்.

ஏனைய செய்திகள்