இன்று 44 இடங்களில் Sinopharm தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை முன்னெடுப்பு

by Staff Writer 11-05-2021 | 7:51 PM
Colombo (News 1st) மேல் மாகாணத்தில் வசிப்போருக்கு Sinopharm கொரோனா தடுப்பூசியை ஏற்றும் நடவடிக்கை முப்படையினரின் ஒத்துழைப்புடன் இன்று 44 இடங்களில் முன்னெடுக்கப்பட்டது. நாளாந்தம் 30,000 பேருக்கு Sinopharm கொரோனா தடுப்பூசி ஏற்றப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார். இதேவேளை, கொழும்பின் 8 இடங்களில் Sinopharm கொரோனா தடுப்பூசியை ஏற்றும் நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டது. ரஷ்யாவிலிருந்து கிடைக்கப்பெற்ற Sputnik V தடுப்பூசி கொட்டிகாவத்தை ராஜசிங்க வித்தியாலயத்தில் இன்று ஏற்றப்பட்டது முல்லேரியா - கல்வான பிரசேத்தின் கலட்டுவா வத்த விகாரையிலும் Sputnik V தடுப்பூசி ஏற்றப்பட்டது. சீனாவில் தயாரிக்கப்பட்ட Sinopharm தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை மாளிகாவத்தை P.D.சிரிசேன விளையாட்டு மைதானத்தில் இன்று முன்னெடுக்கப்பட்டது களுத்துறை மாவட்டத்தின் அனைத்து சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளும் உள்ளடங்கும் விதமாக தெரிவு செய்யப்பட்ட பிரதேசங்களில் இன்று Sinopharm தடுப்பூசி ஏற்றும் முதலாம் கட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. கம்பஹா மாவட்டத்தின் 18 இடங்களில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை நடைபெற்றதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார். கிரிந்திவெல மத்திய வித்தியாலயத்திலும் மீரிகம பிரதேசத்திலும் இன்று தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இடம்பெற்றது.