யாழ்ப்பாணத்தில் பிறந்த ஜெய் கணேஷ் பிரிட்டனில் உள்ளூராட்சி உறுப்பினராகத் தெரிவு 

யாழ்ப்பாணத்தில் பிறந்த ஜெய் கணேஷ் பிரிட்டனில் உள்ளூராட்சி உறுப்பினராகத் தெரிவு 

யாழ்ப்பாணத்தில் பிறந்த ஜெய் கணேஷ் பிரிட்டனில் உள்ளூராட்சி உறுப்பினராகத் தெரிவு 

எழுத்தாளர் Bella Dalima

11 May, 2021 | 10:46 pm

Colombo (News 1st) இலங்கையில் பிறந்த ஜெய் கணேஷ் பிரித்தானியாவின் Sherborne St John மற்றும் Rooksdown வட்டார உள்ளூராட்சி உறுப்பினராக தெரிவாகியுள்ளார்.

கடந்த 6 ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில் பிரித்தானியாவின் ஆளும் கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி சார்பாக போட்டியிட்ட ஜெய் கணேஷ் , 1185 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் பிறந்த ஜெய் கணேஷ், ஆரம்பக் கல்வியை யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியிலும், உயர் கல்வியை கொழும்பு இந்துக் கல்லூரியிலும் பயின்றுள்ளார்.

இவர் பிரபல தொழிலதிபர் மற்றும் பரோபகாரர் தம்புசாமியின் பேரன் ஆவார்.

லண்டன் Metropolitan பல்கலைக்கழகத்தில் சர்வதேச சுற்றுலா நிர்வாகத்தில் பட்டம் பெற்ற இவர், உள்ளூர் அரசாங்கத்தில் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக பணியாற்றியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்