மலேசியா முழுமையாக முடக்கப்பட்டது

மலேசியா முழுமையாக முடக்கப்பட்டது

by Staff Writer 11-05-2021 | 8:58 AM
Colombo (News 1st) கொரோனா நோயாளர்கள் அதிகரித்துள்ளமையால் மலேசியா முழுமையாக மூடப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜூலை மாதம் 07 ஆம் திகதி வரை நாடு மூடப்பட்டுள்ளதாக மலேசிய பிரதமர் மொஹிதீன் யாசீன் (Muhyiddin Yassin) தெரிவித்துள்ளார். அனைத்து மாநிலங்களுக்கிடையிலான மற்றும் மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், கல்வி நிலையங்களும் மூடப்பட்டுள்ளதுடன் பொருளாதார துறைசார் வர்த்தகத்தை தொடர அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். மலேசியாவில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று மூன்றாம் அலையானது, தேசிய நெருக்கடி நிலையை ஏற்படுத்தியுள்ளதாக மலேசிய பிரதமர் மொஹிதீன் யாசீன் தெரிவித்துள்ளார்.