குண்டுத்தாக்குதலுக்கு இலக்கான மொஹம்மட் நஷீட்டுக்கு உதவ பிரதமர் முன்வந்துள்ளார்

குண்டுத்தாக்குதலுக்கு இலக்கான மொஹம்மட் நஷீட்டுக்கு உதவ பிரதமர் முன்வந்துள்ளார்

குண்டுத்தாக்குதலுக்கு இலக்கான மொஹம்மட் நஷீட்டுக்கு உதவ பிரதமர் முன்வந்துள்ளார்

எழுத்தாளர் Bella Dalima

11 May, 2021 | 4:46 pm

Colombo (News 1st) குண்டுத்தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் மாலைத்தீவுகளின் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய சபாநாயகருமான மொஹம்மட் நஷீட் தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ நலன் விசாரித்துள்ளார்.

மொஹம்மட் நஷீட்டின் தந்தையை தொலைபேசியூடாக பிரதமர் தொடர்புகொண்டுள்ளார்.

இதன்போது, மொஹம்மட் நஷீட் விரைவில் குணமடைய வேண்டி பிரார்த்திப்பதாக தெரிவித்த பிரதமர், அவர் குணமடைவதற்கு ஏதேனும் உதவிகள் தேவைப்படின் அறிவிக்குமாறு கோரியுள்ளார்.

மொஹமட் நஷீட் தனது வீட்டின் முன்பாக காரில் ஏறிய சந்தர்ப்பத்தில் குண்டுத் தாக்குதலுக்கு இலக்காகியிருந்தார்.

தாக்குதலில் படுகாயமைந்த அவர், 16 மணித்தியாலங்கள் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் தற்போது வரை அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்