by Staff Writer 10-05-2021 | 9:56 PM
Colombo (News 1st) எதிர்வரும் 30 ஆம் திகதி வரை மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஆலோசனை வழங்கியுள்ளார்.
கொரோனா தொற்றை இல்லாதொழிக்கும் நோக்கில் அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடி ஜனாதிபதி இந்த ஆலோசனையை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க தெரிவித்தார்.
ஒன்றுகூடல் நிகழ்ச்சிகளை இரத்துச் செய்யுமாறும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க குறிப்பிட்டார்.