இன்று தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள்

இன்று தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள்

by Chandrasekaram Chandravadani 10-05-2021 | 1:42 PM
Colombo (News 1st) ​மேலும் 16 கிராம சேவகர் பிரிவுகள் இன்று (10) காலை 06 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார். அதனடிப்படையில், கம்பஹா மாவட்டத்தின் மஹர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எட்டிகெஹெல்கல்ல மேற்கு, கட்டான பொலிஸ் பிரிவின் KC சில்வா கிராம உத்தியோகத்தர் பிரிவு, கதிரான வடக்கு - எட்டபஹவத்த கிராமம், கதிரான தெற்கு - பேஷகர்ம கிராமம் என்பன தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. கம்பஹா மாவட்டத்தின் வத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சேதவத்தை கிராம சேவகர் பிரிவின் மஹ பமுனுகம பிரிவு, குஞ்சகஹவத்த கிராம சேவகர் பிரிவின் 44 ஆவது ஒழுங்கை, நில்சிறிகம கிராம உத்தியோகத்தர் பிரிவின் 3 மற்றும் 7 ஆவது ஒழுங்கை ஆகிய பகுதிகள் என்பன தனிமைப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளன. அம்பாறை மாவட்டத்தின் நவமெதகவ கிராம உத்தியோகத்தர் பிரிவின் நவமெதகம பகுதி, பக்மீதெனிய கிராம உத்தியோகத்தர் பிரிவின் ரன்ஹெலகம பகுதி, சேருபிட்டிய உப பிரிவு என்பன தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அங்கம்மன கிராம உத்தியோகத்தர் பிரிவு முடக்கப்பட்டுள்ளது. களுத்துறை மாவட்டத்தின் மொரகஹஹேன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாலன்னொருவ, கோரலஇம மற்றும் கும்புக்க மேற்குமற்றும் ஹொரணை பொலிஸ் பிரிவின் கீழுள்ள நர்த்தனகல கிராம உத்தியோகத்தர் பிரிவு என்பன தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. மொனராகலை மாவட்டத்தின் மொனராகலை பொலிஸ் பிரிவின் போப்பிட்டிய கிராம உத்தியோகத்தர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, கம்பஹா, அம்பாறை, குருநாகல், திருகோணமலை மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் 14 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன. திருகோணமலை மாவட்டத்தின் உப்புவௌி பொலிஸ் பிரிவின் அன்புவெளிபுரம் கிராம சேவகர் பிரிவு, திருகோணமலை பொலிஸ் பிரிவின் உவர்மலை, மட்கோ மற்றும் லிங்கநகர் கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன. திருகோணமலை மாவட்டத்தின் சீனன்குடா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லங்காபாலம, தான்யகம 01 ஆகிய பகுதிகள், கவட்டிக்குடா கிராம சேவகர் பிரிவின் சமன்புர, மீன்பிடி கிராமம் மற்றும் தான்யகம 02 ஆகிய பகுதிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. கம்பஹா மாவட்டத்தின் திவுலப்பிட்டிய பொலிஸ் பிரிவின் அஸ்வென்னவத்தை கிழக்கு கிராம சேவகர் பிரிவு, கொட்டதெனியாவ பொலிஸ் பிரிவின் ஹீரளுகெதர கிராம சேவகர் பிரிவு ஆகியன விடுவிக்கப்பட்டுள்ளன. அம்பாறை மாவட்டத்தின் தெஹியத்தக்கண்டிய பொலிஸ் பிரிவின் கதிராபுர கிராம சேவகர் பிரிவு, சந்தன பிரிவு மற்றும் தொலகந்தை பிரிவு ஆகிய பகுதிகளில் தனிமைப்படுத்தல் நீக்கப்பட்டுள்ளது. குருநாகல் மாவட்டத்தின் கம்புக்கெட்டே பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தித்தவெலகல மற்றும் நிராவிய கிராம சேவகர் பிரிவுகள் விடுவிக்கப்பட்டுள்ளன. களுத்துறை மாவட்டத்தின் பாணந்துறை தெற்கு பொலிஸ் பிரிவின் நாரம்பிட்டி 696 A கிராம உத்தியோகத்தர் பிரிவு என்பன தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

ஏனைய செய்திகள்