by Staff Writer 09-05-2021 | 9:39 PM
Colombo (News 1st) இலங்கையில் பிறந்தவரான லூஷன் பெர்னாண்டோ, பிரித்தானியாவின் கிழக்கு சசெக்ஸ் உள்ளூராட்சி உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 06ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில் பிரித்தானியாவின் ஆளும் கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி சார்பாக போட்டியிட்டு லூஷன் பெர்னாண்டோ வெற்றியீட்டியுள்ளார்.
கொழும்பில் பிறந்தவரான இவர் பிரித்தானியாவுக்கு புலம்பெயர்ந்து பிரித்தானிய இராணுவம் மற்றும் மெட்ரோ பொலிஸ் ஆகியவற்றில் கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.