by Staff Writer 09-05-2021 | 7:07 PM
Colombo (News 1st) நாட்டிலுள்ள பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், முன்பள்ளிகள் மற்றும் பிரிவெனாக்கள் என்பனவற்றை மீளத் திறப்பது தொடர்பில் எதிர்வரும் புதன்கிழமை (12) கலந்துரையாடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த கலந்துரையாடலில் கலந்துகொள்வதற்காக வைத்தியர்கள், கல்விசார் நிபுணர்கள் உள்ளிட்டோரை அழைப்பதற்கு எதிர்பார்ப்பதாக கல்வியமைச்சர், பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இதன்போது பெறப்படுகின்ற ஆலோசனைகளின் பிரகாரம் பாடசாலைகளை மீள திறப்பது தொடர்பான தீர்மானம் மேற்கொள்ளப்படும் என கல்வியமைச்சர் கூறியுள்ளார்.